Thursday 15 November 2012

தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள்

ஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை  புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .


  முதல் நோய்தன்மையுடைய உணவு : பால் 


                                                         பூமியில் பால் அருந்துவதிலிருந்து பிரிக்க முடியாத ஒரு உயிர் ஜீவி இருக்கிறது என்றால் அது மனிதன்தான் .எந்த ஒரு உயிரினமும் தனது இனத்து பாலை தவிர மற்ற இனத்தின் பாலை குடிப்பதில்லை. பசுவின் பாலின் இரசாயன அமைப்பு மனித இன பாலின உள்ளமைப்பிலிருந்து வேறுபட்டது . அது இலகுவாக ஜீரணம் ஆகாத ஒன்று. நமது உடலின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றுகிற உணவு. ஆராய்ச்சி முடிவுகளின்படி , பால்  பலவித நோய்களுக்கு உதாரணமாக தைராய்டு பிரச்சினைகள் ,இதயநோய்கள், புற்றுநோய்,மூட்டுவலி, கை, கால் நடுக்கம் ,ஒற்றை தலைவலி , தலைவலி பிரச்சினை ,எதிர்வினைகள் , காது சம்பந்தமான தொற்றுநோய்கள் , காச நோய்கள் மேலும் உடல் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு காரணமாக செயல்படுகிறது .பசும்பாலில் உள்ள கால்சியம் மிகவும் தரம் குறைந்தது. மனித உடல் ஏற்றுகொள்ள முடியாத நிலையில் உள்ளது . நாம் இரத்த சோகையினால் பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் பால் உணவுகளில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது .மிருகப்பால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல .

இரண்டாவது ஆரோக்கியமற்ற உணவு : சர்க்கரை

                                                                                       சர்க்கரை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்துகிறது . மேலும் உடலின் தாது சமன்பாட்டை  நிலைகுலைய செய்கிறது. நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது .மேலும் உடலில் உருவாகும் உட்சுரப்பு திரவத்தின் சமநிலைக்கேடுக்கு காரணமாகிறது .சர்க்கரை டால்டா , ஆல்பா , பீட்டா , என்ற மூளை அலைகளின் வளர்ச்சிக்கு காரணமாகிறது . அதிக எண்ணிக்கையையும் உருவாக்குகிறது. இதன்மூலம் தெளிவாக சிந்திக்ககூடிய மனித மூளையின் திறமையை குறைக்கிறது.

மூன்றாவது ஆரோக்கியமற்ற உணவு :கடல் உப்பு 

 

 
                                                            அதிக உப்பு அதிக இரத்த அழுத்தத்தையும்  நரம்பியல் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. அதிக உப்பு கலந்த உணவு, எலும்பு அடர்த்தியை குறைக்கிறது. உப்பு அதிகமாவது  இடது வேன்ரிகுலர்  ஹைபர்டிரபி( Left ventricular hypertrophy ) இதயம் அளவில் பெரியதாவது , இதய நோய் வருவதற்க்கான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது . மூளைத்திசுவிற்கு உப்பு உகந்ததல்ல . இதன் மூலம் சிறிய தாக்குதல்களுக்கு காரணியாகிறது. 

நான்காவது ஆரோக்கியமற்ற உணவு : பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

 

மேன்மைபடுத்தப்பட்ட வெள்ளை அரிசியை உட்கொள்ளுவதால் வயிற்று குடல் பிரச்சினைகளும்  இதய நோய்களும் வரும் சூழ்நிலை உருவாகிறது. ஏனென்றால் நார்ச்சத்து மற்றும் மிக அத்தியாவசியமான எண்ணைகளை கொண்டிருக்கும் தவிடு ( நோய்களை தடுக்கும் பணியை செய்யும் ) அரிசியை மேன்மைபடுத்தும்போது  அது முற்றிலும் நீக்கபடுகிறது.  மேன்மைபடுத்திய அல்லது வெள்ளை அரிசி கோலோஸ்டிராலுக்கு காரணமாகிறது. ஏனென்றால் உடலுக்கு உதவும் எல்லா நல்ல எண்ணெய்களும் இந்த அரிசியிலிருந்து நீக்கபடுகிறது . இதை தவிர்த்து  உங்கள் உடலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் வெள்ளை அரிசி தன்வயபடுத்துகிறது .அதிகபடியான கார்போஹைட்ரேட்  உணவு உட்கொள்ளுவதால் சர்க்கரையின் சமன்பாடு சீர்குலைகிறது . இது நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. மேலும் இது உடலிலுள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் உள்ளமைப்பின்மீது அதிக அழுத்தத்தை செலுத்தி சீர்குலைக்கிறது 

ஐந்தாவது ஆரோக்கியமற்ற உணவு : வெள்ளை மாவு

வெள்ளை மாவு கணையத்தின் பீட்டா செல்களை அழித்துவிடும் . நீரிழிவு நோய்களை உருவாக்கும் ரசாயன பொருளான அல்லோக்சனை கொண்டிருக்கிறது. ஒருவர் மேன்மைபடுத்தபட்ட உணவை அதிகமாக உட்கொண்டால் அதை சமாளிக்க அதிகமான அளவில் இன்சுலின் சுரக்க வேண்டும் . வெள்ளை மாவில் உள்ள செயற்கையான B -வைட்டமின்கள் நிலக்கரி தாரிலிருந்து (Coalter ) உருவாக்கபடுகிறது. இது உடலின் உள்ளமைப்பில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது . கடைகளில் விற்கப்படும் வெள்ளை மாவு அதிக நாள் கடை அலமாரிகளில் வைப்பதற்காக கலக்கப்பட்ட ரசாயன பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது . பொட்டாசியம் bromat  போன்ற இந்த வேதியல் கலவை புற்று நோயை உருவாக்கும் தன்மை உடையவை . வெள்ளை மாவில் உள்ள குளுடன் (Gluten ) என்ற பொருள், குளுடன்  ஏற்று  கொள்ளாதவர்களுக்கு குடல் நோயை ஏற்படுத்துகிறது. மேலும் இது எரிச்சல் ஊட்டக்கூடிய bowel  syndromes , crohns disease , dermatitis herpetifornus (autism ) cerate colitis   என்ற பலநோய்களை உருவாக்குகிறது .

ஆறாவது ஆரோக்கியமற்ற உணவு : சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


                                               Hydrogenation  என்ற முறையின்  மூலம் பல முக்கியமான உயிர்ச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன .இது மொத்த கொலஸ்ட்ரால் வரம்புகளை அதிகமாக்குகிறது . HDL கொலஸ்ட்ராலை  குறைக்கிறது . LDL கொலஸ்ட்ராலை உயர்த்துகிறது.இந்த எண்ணெய்களை உட்கொள்ளுவதால் Breast ,Pastorate and coloncancers இந்த வகையான புற்று நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் அதிகமாகிறது.Toxins and carcinogens என்ற கேடுகளை தவிர்க்ககூடிய உடலின் உள்ளார்ந்த சக்தியை இது குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது உடலில் சுரக்கும் சில திரவங்களிடம் குறுக்கிடுகிறது.


ஏழாவது ஆரோக்கியமற்ற உணவு: குளிர்பானங்கள்


வாயு கலந்த குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் கார்பன் -டை -ஆக்சைடு மிகவும் ஆபத்தானது . இதன் காரணமாக குளிர்பானங்கள் அசிடிக் ஆகின்றன . இது நமது உடலில் உள்ள நமக்கு பயன் தரக்கூடிய நுண்ணுயிர்களை பெரும்பான்மையான உயிரிகளை கொன்றுவிடும் அளவுக்கு அசிடிக் குணம் உடையதாகிறது. குளிர்பானங்களை குடிப்பது ஜீரண வழிமுறைகளை தாமதமாக்குகிறது . குளிர்பானங்களில் அதிகமான சர்க்கரை அளவு மிக அதிகமான கலோரி உள்வாங்குவதால்  பற்சிதைவு ,அதிகமான உடல் எடை என்ற சங்கடங்களையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் கலந்துள்ள பாஸ்பரஸ் மூலத்தன்மையை நீக்குவதற்கு (இது குளிர்பானத்தில் கலக்கபடுகிறது) எலும்புகளில் இருந்து கால்சியத்தை அப்போபடுத்தி பின்னர் இரத்த ஓட்டத்துடன் கலக்க செய்து osteoporosis என்ற ஒரு நோயை உருவாக்குகிறது. குளிர்பானங்களில் உள்ள carbolic Acid எலும்புகளை சிதைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.


எட்டாவது ஆரோக்கியமற்ற உணவு காபி மற்றும் தேனீர்



இது பலருக்கும் தவிர்க்கமுடியாத பழக்கம் . மிக ஆபத்தான பொருட்களின்  கூட்டு சிக்கலான கூட்டுசேர்க்கையான நியாசின் ,cafin ,டிரைகொநெல்லின் ,டேனிக்  அமிலம் என்ற பல பொருட்களின் மொத்த வடிவம் .kafin  நமது உடலில் உள்ள மொத்த நரம்பு  தூண்டிவிட்டு சுறுசுறுப்பாக்குகிறது .அதிக சக்தி என்ற ஒரு கற்பனை தோற்றத்தை உருவாக்குகிறது. இதன் அடுத்தகட்டமாக நமது பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது .

உண்மையில் ,உடல் 24 மனித்துளிகளுக்கும் மேலாக ஒரு கப் காபியின் விளைவுகளைப் போக்குவதற்கு எடுத்துக்கொள்கிறது. காபியின் நீண்ட நாள் விளைவுகள் என்னவென்றால் அடிக்கடி தலைவலி ,ஆங்காங்கே சிவப்பான தோல் திரட்டு ,இதயத்தின் வேகத்துடிப்பு , மலச்சிக்கல் , அதிக தளர்ச்சி , மனநிலையில் ஏற்ற தாழ்வுகள் , மனதை ஒருமுகபடுத்த முடியாமை போன்ற பல விளைவுகளே .

இந்த பானங்கள் உடலின் ஈரப்பசையை நீர்த்தன்மையை நீக்குகின்றது . மேலும் நமது தூக்கத்தை கட்டுபடுத்துகிறது .

ஒன்பதாவது ஆரோக்கியமற்ற உணவு: ஐஸ் கிரீம் 




 செயற்கையான மணங்களும் ,சுவைகளும் மிகவும் பலம் வாய்ந்த சீர்கேடு உணவுகள் .இதன்மூலம் கல்லீரல் , சிறுநீரகம் ,மேலும் இதயம் இவற்றில் நோய்கள் உருவாக வாய்ப்புண்டு . இதில் பயன்படுத்தப்படும் பெப்ரோணல் என்ற மணமூட்டும் ஒரு பொருள் பேன்களை கொல்ல  பயன்படும் ஒரு வேதியல் சாதனம் . அன்னாசிப்பழ ஐஸ் கிரீமில் உபயோகிக்கப்படும் எதில் அசிட்டேட் (Ethyl acetate ) தோல் சம்பந்தமான தொழிலிலும் ,துணி ஆலைத் தொழிலிலும் பயன்படுத்தப்படும் ஒரு வேதியல் பொருள் .இது அந்த தொழில்களில் சுத்திகரிப்புக்கு பயன்படுகிறது . அதிலிருந்து வரும் ஆவிக்காற்று ,தீவிரமான நுரையீரல் , கல்லீரல் இதய பாதிப்புகளை உருவாக்கும் . வாழைப்பழ மணத்திற்காக பயன்படும் amyl butyrate  ஆயில் பெயின்ட் சால்வன்ட்டாக (oil paint solvent ) உபயோகப்படுகிறது. aldehydec 17 செர்ரி flavour ஐஸ் கிரீமில் உபயோக்கிக்கபடுகிறது .இது எளிதில் எரியக்கூடிய ஒரு திரவம் .Plastic மற்றும் ருபபேர் தயாரிப்பு தொழிலில் aniline dyes ஆகப்பயன்படுகிறது 

பத்தாவது ஆரோக்கியமற்ற உணவு : மாமிச உணவு 


புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேளையில் ஆழ்த்துகிறது .இதனால் உடல் உறுப்புகளில் இயக்கத்திரன் குறைகிறது. இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்ப்படுத்தும் .அசைவ உணவுகள் அதில் உள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகப்படுத்துகின்றன .இது உடல் பருமன் ,நீரிழிவு ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய கேடுகலுக்கு வழிவகுக்கிறது . ஏல்லா மிருகங்களின் திசுக்களும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளன .மாமிச உணவை உட்கொள்ளும்போது ,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் எல்லைகள் வரம்பு மீறுகின்றன .அசைவ உணவில் நார்த்தன்மை (Fiber content ) குறைவாக உள்ளதால் குடல் பகுதியில்  உணவின்
இயக்கம் குறைந்து colon புற்று நோய்க்கு காரணமாகிறது .அதாவது குடல் வாயிலிருந்து    மலக்குடல் வரை உள்ள பெருங்குடலின் பகுதியில் புற்று நோயின் பாதிப்பு  வரக்கூடும் . அசைவ  உணவின் விளைவான அதிக அளவு யூரிக் அமிலம் (Uric Acid ) பல நோய்களை  வாதரோகம் ,பிளைட் நோய் (blights disease ) சிறுநீரகக் கற்கள் , கீழ்  வாதம்( முழங்காலில் வீக்கம் ) பித்தப்பை கற்கள் போன்ற பல உடல் நலக் கேடுகளை உருவாக்கும்

No comments:

Post a Comment