Wednesday, 10 July 2013

இரட்டைப் பட்டப்படிப்பு பயனுள்ள ஒன்றா?


இன்டக்ரேட்டட் அல்லது இரட்டைப் பட்டப் படிப்புகள், நேரத்தை மிச்சப்படுத்தி, குறிப்பிட்ட துறைகளில், ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்த உதவுகிறது என்பதை இன்றைய மாணவர்கள் பலபேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு, ஐ.ஐ.டி., கான்பூர் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, அறிவியல், மானுடவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், இரட்டை அல்லது இன்டக்ரேட்டட் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன.

ஒன்றில் இரண்டு...
படித்து முடித்து பணிவாய்ப்புக்காக பட்டதாரிகள் அல்லாடுவதை தவிர்க்கும் வகையில், இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வடிவமைக்கப்பட்டு, ஒருவரை பணிக்கு தயார் செய்கின்றன. இடைவெளியின்றி, ஒரே நேரத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்புகளை இந்த இன்டக்ரேட்டட் படிப்புகள் வழங்குகின்றன.

சில நிறுவனங்களுக்கு, பொறியியல் மற்றும் மேலாண்மை திறன்களைப் பெற்ற மனிதவளம் தேவைப்படுவதால், அவை, இரட்டைப் பட்டப் படிப்பு பெற்ற நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. சாதாரண பட்டப் படிப்பு தகுதிகளைவிட, பணிக்கு தேவையான உடனடித் தகுதியைப் பெறுவது மிகவும் உயர்ந்தது என்பதை உணர வேண்டும். பி.டெக்., படிப்புடன், எம்.பி.ஏ., பட்டத்தையும் (4+1) என ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்யலாம். எனவே, இந்த இரட்டைப் பட்டப் படிப்பு திட்டத்தை, விரைவுபடுத்தப்பட்ட படிப்புத் திட்டம் என்றும் கூறலாம்.

படிப்பின் காலகட்டம்
படிப்பை பொறுத்து, கல்வி நிறுவனத்தைப் பொறுத்து, காலகட்டம், 4 முதல் 7 ஆண்டுகள் வரை விரியும். இன்டர்மீடியேட் முதல் பிஎச்.டி., வரையான படிப்புகள் இம்முறையில் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், உயர்கல்வி பெறும்போது, மாணவர்களை எளிதாக பணிக்கு தயார்படுத்த முடிகிறது மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்டத்துடன் மாணவர்கள் நன்கு பழக்கமாகி, மேம்பட்ட சிந்தனைகளைப் பெறுகிறார்கள் என்று சில கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உற்சாகமாக படித்தல்
பொறியியல் பிரிவில், இரட்டைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், தங்களுக்கான பாடங்கள், வேறுபட்ட முறையில் விரிவாக கற்பிக்கப்படுவதின் மூலம், புதிய அனுபவத்தைப் பெறுகிறார்கள். பொறியியல் முதுநிலைப் பட்டம்பெற மொத்தம் 6 ஆண்டுகள் செலவழிக்க வேண்டிய நிலையில், 5 ஆண்டுகளிலேயே முதுநிலைப் பட்டம் பெற்றுவிடுவது அவர்களுக்கு  மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது.

பழைய பட்டப் படிப்பு முறைகளிலிருந்து(6 ஆண்டுகள் படிப்பு) புதிய இரட்டைப் பட்டப் படிப்பு முறைகளுக்கு மாறுவதென்பது, பல கல்வி நிறுவனங்களில் உற்சாகமுள்ளதாகவே இருக்கிறது. ஒரு மாணவரை, தொழில்துறைக்கு தயாரானவராக மாற்றுவதில், இந்த இரட்டைப் பட்டப்படிப்பு முறை தெளிவாக செயல்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இந்தப் புதிய கல்வி முறையின் மூலமாக, நுணுக்க சிந்தனை மற்றும் கற்றல் உற்சாகம் அதிகரிக்கிறது. பொதுவாக, இரட்டைப் பட்டப் படிப்பின் பாடத்திட்டமானது, நிறைந்த உள்ளடக்கமும், பயன்பாட்டு அடிப்படையும் கொண்டது.

பாடத்தை தெரிவு செய்தல்
ஒரு கல்வி நிறுவனத்தில், இரட்டைப் பட்டப் படிப்பை தேர்வு செய்கையில், அந்த கல்வ நிறுவனத்தின் அங்கீகாரம், புகழ் மற்றும் தரம் ஆகியவற்றை கட்டாயம் மனதில் கொண்டே முடிவுசெய்ய வேண்டும். ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில், மூன்றாம் வருட பி.டெக்., படிப்பை முடித்தவுடன், எம்.டெக்., படிப்பில் சேர முடியும்.

ஆறாவது செமஸ்டர் முடிந்த பின்னர், 6.5 CGPA அளவில் மதிப்பெண் வைத்துள்ள அத்தகைய ஆர்வமிக்க மாணவர்கள், ஆசிரியர் மற்றும் துறைத் தலைவரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள். இதன்மூலம், இரட்டை டிகிரி படிப்புக்கு மாறிக்கொள்ள பரிந்துரை செய்யப்படுகிறது.

இரட்டை டிகிரி படிப்புகளுக்கான சேர்க்கை முறை, கல்வி நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. சில கல்வி நிறுவனங்கள், முதல் நாளிலிருந்தே, இரட்டை டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்கள், இரட்டை டிகிரி படிப்பிற்கான சேர்க்கையில், மாணவர்களின் சூழலைப் பொறுத்து, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்கின்றன. வேறுசில கல்வி நிறுவனங்களில், இரட்டை டிகிரி படிப்பு முறையை ஒரு மாணவர் கடினமாக உணர்ந்தால், அவர் எம்.டெக்., படிப்பில் சேராமலேயே விலகிக் கொள்ளலாம்.

பணத்தையும், நேரத்தையும் சேமித்தல்
போட்டி நிறைந்த சந்தையில், ஒரு வருடத்தை சேமிப்பதென்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர், ஒரு வெளிநாட்டு பல்கலையில் எம்.டெக்., படிப்பை முடித்தால், இரட்டை டிகிரி பட்டதாரிக்கு சமமாகவே கருதப்படுவார் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். மேலும், இரட்டைப் பட்டப் படிப்பானது, தொழில் தொடர்பாக, விரைவான முடிவெடுக்க உதவுகிறது.

பொதுவாக, பி.இ., படிப்பிற்கு 2 லட்சமும், எம்.டெக்., படிப்பிற்கு 1.25 லட்சமும் செலவாகிறது. ஆனால், இரட்டை டிகிரி படிப்பில், குறைந்தபட்சம் 1 லட்சம் வரை மிச்சமாகிறது மற்றும் முதுநிலைப் படிப்பில் சேர்வதற்காக எழுத வேண்டிய நுழைவுத்தேர்விலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும், அலைச்சலின்றி, இரண்டு பட்டங்களையும், ஒரே கல்வி நிறுவனத்தில் பெற்றுக் கொள்ளவும் முடிகிறது.

சந்தை தேவையை நிறைவுசெய்தல்
இன்றைய நிலையில், ஒவ்வொருவரும் ஸ்பெஷலைசேஷனை எதிர்பார்க்கின்றனர். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கு சந்தையில் தேவை அதிகமாக இருந்தாலும், அனுபவம் அதிகமுள்ளவர்களே, தொழில்துறைகளுக்கு தேவைப்படுகிறார்கள். இந்த இடத்தில்தான், இரட்டை டிகிரி படிப்பின் தேவை பன்மடங்கு அதிகரிக்கிறது. தனித்தனியாக இளநிலை, முதுநிலை படிப்புகளை முடித்தால் என்ன மரியாதையோ, அதேயளவு மரியாதைதான், இரட்டை டிகிரி முறையில், இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்பை முடிப்பதற்கும் கிடைக்கிறது.

ஒரு பி.டெக்., பட்டதாரி ஆண்டு சம்பளமாக ரூ.6 - 12 லட்சம் பெறுகிறார் என்றால், ஒரு இரட்டை டிகிரி முடித்தவர், ஆண்டுக்கு ரூ.9 - 15 லட்சங்கள் பெறுகிறார். கூகுள் போன்ற பிரபலமான நிறுவனங்கள், பி.டெக்., பட்டதாரிகளை விட, இரட்டை டிகிரி முடித்தவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதாவது, ஆராய்ச்சி செய்யும் மனப்பாங்கு மற்றும் தனியாக சிக்கலைத் தீர்க்கும் திறன் பெற்ற நபர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது.

மாறுபாடுகள்
குறிப்பிட்ட அளவிலான மாணவர்களுக்கு, இந்த இரட்டை டிகிரி படிப்பு ஒத்துவருவதில்லை. அவர்கள் இப்படிப்பில் சேர விரும்புவதுமில்லை. ஏனெனில், சிலருக்கு பி.டெக்., மூன்றாமாண்டு படிக்கும்போதே, நல்ல நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. எனவே, அதற்குமேல் அவர்கள் முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள விரும்புவதில்லை. எனவே, கல்வி நிறுவனங்களைப் பொறுத்து, நிலைமை வேறுபடுகிறது.

Monday, 24 June 2013

நீங்கள் ஐ.டி., துறையை சேர்ந்தவரா? - இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்

        
              சந்தையில் குவிந்திருக்கும் வேலைகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் தகுதியான ஆட்கள்தான் கிடைப்பதில்லை. தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினைகளே இதுதான். சாப்ட்வேர், பி.பி.ஓ., மற்றும் பார்மா துறைகளில் அதிகளவிலான வேலைகள் நிறைந்துள்ளன.

எனவே, எவ்வளவு வேலைகள் காலியாக உள்ளன என்பது பிரச்சினையல்ல. ஆனால், அந்த வேலைகளுக்கான தகுதிபெற்ற ஆட்கள் இருக்கிறார்களா? என்பதுதான் பிரச்சினை. எனவே, சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, அதற்கேற்ப தனது அனைத்துவிதமான திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் திறன் பெற்றவர்களையே, தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. மேலும், நாள்தோறும் புதுப்புது தொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருவதால், அவற்றை கையாளும் வகையில், தனது திறன்களை வளர்த்துக்கொள்ளும் திறன்பெற்றவர்களாகவும் அந்த நபர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.



இன்றைய நிலையில், ஐ.டி., நிறுவனங்களைப் பொறுத்தவரை, சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்து, புதிய திறன்களை கற்றுக்கொள்ளும் நபருக்கே முதல் முன்னுரிமை தரப்படுகிறது. அவர்களே, முதல் தரமான ஆட்களாக கருதப்படுகிறார்கள். ஏனெனில், வாடிக்கையாளர்கள், தாங்கள் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனமானது, தினந்தோறும் பெருகிவரும் தொழில்நுட்பங்களின் அடிப்படையிலான புதிய தீர்வுகளின் மூலமான சேவையை வழங்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றனர்.

இப்படி எதிர்பார்க்கும் நிறுவன வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பிரயத்தனப்பட வேண்டியுள்ளது. நிறுவனப் பணியாளர்கள் தங்களின் சிறப்புத்திறன்களை, வாடிக்கையாளர் தரும் பணத்தில் மேம்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை உள்ளது. வாடிக்கையாளர்கள், அடிக்கடி புதிதுபுதிதாக எதிர்பார்ப்பதால், அனுபவம் வாய்ந்த பணியாளர்களே, தங்களின் திறன்களை அடிக்கடி மேம்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, சிறந்த மனிதவளமாக திகழ விரும்பும் ஒவ்வொருவரும், விஷயங்களை புதிதாக கற்றுக்கொள்ளும் திறனைப் பெற்றிருப்பதோடு, வலிமையான சிக்கல் தீர்க்கும் திறன், சிறந்த தகவல்தொடர்பு திறன்கள் மற்றும் விரைவாக கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.

எனவே, ஒரு நிறுவனம் புதிதாக படித்து வெளிவரும் பட்டதாரிகளை பணிக்கு எடுக்கையில், அவர் ஒரு விஷயத்தை எந்தளவு விரைவாக கற்றுக்கொள்வார் என்பதில் கவனம் செலுத்தியே, அவரை பணிக்கு எடுக்கிறது. மேலும், அவரிடம் அதிக விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. சில வருட அனுபவத்துடன் ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் நபரிடம், அவர் தன் துறைசார்ந்து எந்தளவிற்கு திறனும், அனுபவமும், பகுப்பாய்வு திறனும் பெற்றுள்ளார் என்று பார்க்கப்படுகிறது.

அடுத்த முக்கிய விஷயம்
தற்போதைய நிலவரப்படி, ஒவ்வொரு நிறுவனமும், கீழ்கண்ட 3 விஷயங்களில் அதிக முதலீடு செய்கின்றன. Network Security, Cloud & Mobility infrastructure and Big Data போன்றவையே அவை. இந்த மூன்று துறைகளில், ஆட்களை பணியமர்த்துவது அதிகமாக இருக்கிறது. எனவே, ஒரு Developer -ஆக சில வருட அனுபவம் உங்களுக்கு இருந்தால், மேற்கூறிய விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

உங்களை உயர்த்துவது எது?
தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் அறிவைத் தவிர, ஒரு பணியாளரை வேலைக்கு அமர்த்துகையில், ஆழ்ந்த அறிவு, துறை நிபுணத்துவம், படைப்பாக்க சிந்தனை மற்றும் சிறந்த தகவல்தொடர்பு திறன் ஆகிய விஷயங்களுக்கும், ஒரு நிறுவனம் சமமான முக்கியத்துவம் கொடுக்கிறது. சில வருட பணி அனுபவம் உடையவர்கள், தொழில்நுட்ப திறன்களுடன், ஆழமான துறை அறிவையும் கொண்டிருந்தால் அவர் பெறக்கூடிய முக்கியத்துவம் அதிகம்.

ஒருவர் தனது துறையில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதில் கவனம் செலுத்தி, அதிலேயே ஸ்பெஷலைஸ் செய்யும் ஒருவர், ஒரு வெற்றிகரமான கன்சல்டன்டாக(consultant) மாற முடியும்.ஏனெனில், கன்சல்டன்ட் பணிக்கு நிறைய தகுதியான நபர்கள் தேவைப்படுகிறார்கள். வணிகம் சார்ந்த முடிவெடுக்கும் திறன் பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தொழில்நுட்பத்தைப் பற்றி படிப்பதென்பது, வெறுமனே அந்த தொழில்நுட்பத்திற்காக மட்டுமல்ல. அதன்மூலமாக, வேறு பல விஷயங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொழில்நுட்ப அறிவுடன் சேர்த்து, வணிக செயல்பாட்டு அறிவையும் கொண்டிருக்க வேண்டும்.
இதுதொடர்பாக நிறுவனங்கள் சொல்வது என்னவென்றால், தொழில்நுட்ப அறிவு என்பது முக்கியமானது. ஆனால், அதேசமயம், அதனுடன் சேர்த்து, நிதி அல்லது பார்மசூடிகல் ஆகிய துறைகளின் அறிவும் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். சம்பந்தப்பட்ட துறைகளைப் பற்றிய கூடுதல் அறிவு இருக்கையில், ஒரு ஐ.டி., நிபுணர் தனது தொழில்நுட்பத் திறனை மிக சரியான முறையில் பயன்படுத்த முடியும்.

ஆனால், இன்றைய நிலையில், பல இளைஞர்களிடம் ஆழ்ந்த அறிவு என்பது இருப்பதில்லை. இந்த போக்கு, அவர்களின் நீடித்த வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கிறது. படித்த நபர்களுக்கு, முறையான பயிற்சிகள் இருப்பதில்லை. ஒருவர், சிறந்த தொழில்முறை மேம்பாட்டை அடைய வேண்டுமெனில், அவர் ஆழமாக சென்று படிக்க வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் பணியில் சேரும் இளைஞர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, அவர்களை பணிக்கு சேர்க்கும் நிறுவனத்தால் அனைத்து வாய்ப்புகளையும் வழங்க முடியாது. தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை, பயனுள்ள முறையில் தாங்கள்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இளைய சமூகம், பலவிதமான கவனச் சிதறல்களால் பாதிக்கப்படுகிறது. சிற்றின்பம் சம்பந்தமான விஷயங்களுக்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால், பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்கு, ஊன்றி கவனித்து, துறை சம்பந்தமான ஆழமான அறிவை அவர்கள் பெற்றுக்கொண்டால், அடுத்த பல ஆண்டுகள் அவர்கள் கவலையின்றி கோலோச்ச முடியும். கற்பதற்கு ஆர்வமும், அதற்கான திறனும் இருப்பது அவசியம்.

பல முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தங்களின் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதிகளைக் கொண்டுள்ளன மற்றும் தொழில் திறனை மேம்படுத்தும் வகையிலான கூடுதல் படிப்புகளை மேற்கொள்ள, தங்களின் பணியாளர்களை ஊக்கப்படுத்துகின்றன. இதுபோன்ற லாபக் கூறுகளை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்வது ஒருவரின் புத்திசாலித்தனமான செயலாகும்.

கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளும் ஒருவர், தனது சக பணியாளர்களைவிட, அதிக முக்கியத்துவம் பெறுவார். உங்களின் பணியை செய்துகொண்டே, புதிய ப்ரோகிராமிங் மொழிகளைக் கற்றுக்கொள்வது அல்லது புதிய திறன்களை வளர்த்துக்கொள்வது என்பது, உங்களின் பேரம் பேசும் திறனை அதிகப்படுத்தும். இதன்பொருட்டு, பல ஆன்லைன் வளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும், ஐ.டி., துறையில் பணியாற்றும் ஊழியர்கள், தங்களின் கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில், பல பயிற்சி நிறுவனங்கள், பல படிப்புகளை வழங்குகின்றன. உதாரணம், NIIT நிறுவனம், Cisco, Microsoft and Oracle போன்ற பிரிவுகளில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

மொழித்திறன்
மேற்கூறிய அனைத்து அம்சங்களுடன், இன்னொரு முக்கிய அம்சத்தை கணக்கில் எடுக்க வேண்டியுள்ளது. ஏனெனில், ஐ.டி., துறையில் பணிபுரியும் ஒரு நிபுணர், வெளிமாநிலத்தை சேர்ந்தவருடனோ அல்லது வெளிநாட்டை சேர்ந்தவருடனோ பேச வேண்டியிருக்கும். அப்போது, அவரின் மொழி மற்றும தகவல் தொடர்பு திறன் இன்றியமையாத ஒன்று. எனவே, ஒருவரை பணிக்கு எடுக்கையில், அவரின் தொழில்நுட்பத் திறன், ஆழ்ந்த அறிவு, கூடுதல் தகுதிகள் ஆகிய பலவற்றுடன், மொழித்திறனுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நல்ல மொழித்திறன் பெற்ற ஒருவரை, எளிதில் இழக்க எந்த நிறுவனமும் விரும்புவதில்லை.

மேற்கூறிய அலசல்களின் மூலம், ஐ.டி., துறை ஊழியர்கள் பல்வேறான தகுதிகளையும், திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் சிறந்த பணி வாய்ப்புகளையும், நல்ல சம்பளத்தையும் பெற்று, தங்களின் துறையில் கோலோச்ச முடியும் என்பது புலனாகிறது.

Wednesday, 10 April 2013

இன்சூரன்ஸ் எடுத்தவர் இறந்தால் செய்ய வேண்டிய 5 வேலைகள்

         ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது மனித வாழ்விற்கான ஒரு பாதுகாப்பான திட்டம் ஆகும். இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் எதிர்பாராத விபத்தில் தீடீரென்று காலமாகிவிட்டால் அவருடைய குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகமல் இருக்க இந்த காப்பீட்டுத் திட்டம் உதவி செய்கிறது. அவர் சேர்ந்திருந்த காப்பீட்டுத் திட்டம் அவர் சேமித்திருக்கும் தொகை மற்றும் அவற்றிற்கான கவரேஜ் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவருடைய குடும்பத்திற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனமே பொருளாதார உதவிகளை செய்யும்.

         காப்பீட்டுத் தொகை முதிர்ச்சி அடைந்தாலோ அல்லது உயிருடன் இருக்கும் போதே காப்பீட்டுத் தொகையை பெற விரும்பினாலோ, அந்தத் தொகையைத் திட்டமிட்டு பெற முடியும். ஆனால் காப்பீட்டுத் தொகையச் செலுத்தி வந்தவர் இறந்துவிட்டால் அவர் செலுத்தியக் காப்பீட்டுத் தொகையைப் பெற திட்டமிட முடியாது. ஆகவே அப்படிப்பட்ட சோகமான சூழலில் இறந்தவருடைய காப்பீட்டுத் தொகையைப் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவர் இறந்த பின் அவருடைய ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

1. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் பணம் செலுத்தி வந்தவரின் மரணத்தை அறிவித்தல்

ஒருவர் இறப்பு என்பது ஒரு துக்கமான நிகழ்வாகும். அவருடைய இறப்பு அவருடைய குடும்பத்திற்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் அந்த அதிரிச்சியிலிருந்து விரைவில் மீண்டு வந்து, அவருடைய இறப்பை மிக விரைவாக, அவர் செலுத்தி வந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். கால தாமதம் செய்தால் அவருடைய பணத்தைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படும்.

ஆனால் பெரும்பாலோர், இறந்தவரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாலும், அவருடைய இறப்பை விரைவில் ஆயுள் காப்பீட்டுத் திட்ட முகவரிடம் தெரிவிக்காமல் இருப்பதாலும் இந்த கால தாமதம் ஏற்படுகிறது. கால தாமதம் ஏற்பட ஏற்பட, இறந்தவரின் ஆயுள் காப்பீட்டுத் தொகையை பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவரின் இறப்பை மிக விரைவில் காப்பீட்டு நிறுவனத்திடம் தெரிவிப்பது நல்லது.

2. ஆயுள் காப்பீட்டு முகவரை தொடர்பு கொள்ளுதல்

இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கு உதவி செய்யக்கூடிய ஆயுள் காப்பீட்டு முகவரை மிக விரைவில் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்து இறந்தவரின் காப்பீட்டுத் தொகையப் பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை பெற வேண்டும். காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பாலிசிதாரருக்கு முழு உதவி செய்ய வேண்டியது காப்பீட்டு முகவரின் தலையாய கடமையாகும். எனவே அவரை மிக விரைவில் தொடர்பு கொண்டு காப்பீட்டுத் தொகையை பெறுவதற்கு ஆவண செய்ய வேண்டும். ஒரு வேளை முகவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால், காப்பீ்ட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

3. நாமினி சான்றிதழ்கள்

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திருப்பவர் இறந்துவிட்டால் அவர் யாரை நாமினியாக நியமித்திருக்கிறாரோ அவர் தான் இறந்தவரின் காப்பீட்டுத் தொகையை சட்ட ரீதியாகப் பெற தகுதியானவர். எனவே நாமினி யார் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இறந்தவருக்குப் பின் நாமினி தான் காப்பீட்டுத் தொகைக்கு உரிமையாளர் ஆகிறார். எனவே காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாமினி தேவையான படிவங்களை நிரப்பி, தொகையைப் பெற விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. நாமினி வழங்க வேண்டிய சான்றிதழ்கள்

இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் விரைவாகப் பெற வேண்டும் என்றால் டாக்குமன்டேஷன் மிகச் சரியாக இருக்க வேண்டும். எனவே நாமினி தேவையான படிவங்களை மிகச் சரியாக நிரப்பி, தேவையான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும். எந்தெந்த சான்றிதழ்களை நாமினி வழங்க வேண்டும்,
அ. இறந்தவரின் அசல் இறப்பு சான்றிதழ், நகல் கிடையாது.
ஆ. பாலிசி ஆவணம் அல்லது கடைசியாக பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழ்
இ. நாமினியின் அடையாளம் மற்றும் வயதை உறுதிப்படுத்தும் சான்றுகள்.

5. வங்கி கணக்கு

இறந்தவரின் காப்பீட்டுத் தொகையைப் பெற வேண்டும் என்றால் நாமினி வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். அவர் வங்கிக் கணக்கில் இருக்கும் பெயர் மற்றும் முகவரி, ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர் மற்றும் முகவரியை ஒத்திருக்க வேண்டும். அப்போது தான் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் கால தாமதம் ஆகாது.
மேற்கூறிய அனைத்தும் சரியாக செய்யப்பட்டால் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் கால தாமதம் ஆகாது. மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் பிரச்சனைகளும் ஏற்படாது.

Friday, 22 February 2013

பத்து ரூபாயில் சிறுநீரக கல்லுக்கு சிறந்த தீர்வு..!


இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது. இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இந்த உபயோகமான தகவலை முகநூல் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பதிவு செய்யுமாறு கேட்டு கொண்டார்கள்.இப்போது நம்மில் நிறைய நண்பர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது .
அதனால் இது போன்ற நல்ல தகவல்கள் நாம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று இன்று ஒரு தகவல் பக்கத்தில் பதிவு செய்கிறேன் உங்களுடைய நண்பர்களுக்கும் கட்டாயம் பகிர்வு செய்யுங்கள்
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது…) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது… என்ற கதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும், அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்…
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருதுவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்

நன்றி : http://vayalaan.blogspot.in

Friday, 16 November 2012

மண்ணைப் பொன்னாக்கும் மலைவேம்பு !

            நட்டு வைத்த மரம், பொட்டியில் கட்டி வைத்த பணத்துக்கு ஒப்பானது. இந்த உலகில் பலகோடி மரங்கள் இருந்தாலும், நமது மண்ணுக்கேற்ற, விலை மதிப்புள்ள, விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் பயனளிக்கக் கூடிய முக்கியமான சில மரங்களைப் பற்றி இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். அதில் முதலாவது... முக்கியமானது... மிக வேகமாக வளரக்கூடிய மலைவேம்பு!






ஒரு வருடத்தில் தோப்பாகும்! 


மலைவேம்பு குறுகிய காலத்தில் மற்ற மரங்களைவிட அதிக வருமானம் தரக்கூடியது. குறைந்த அளவு நீர்வளம் உள்ள பகுதிகளிலும் நன்றாக வளரும். பராமரிப்பதும் சுலபம். நடவு செய்த 3-ம் ஆண்டில் காகித ஆலைக்கு அனுப்பிவிட முடியும்; 4-ம் ஆண்டு என்றால், தீக்குச்சி தயாரிப்பதற்காகக் கொடுத்துவிட முடியும்; 5, 6-ம் ஆண்டுகள் என்றால்... பிளைவுட் தயாரிக்கும் நிறுவனங்கள் தேடி வரும். 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டால், அனைத்து மரச் சாமன்களைச் செய்வதற்கும் பயன்படுத்தலாம். 

ஆக, தேவையைப் பொறுத்து எந்த நிலையில் வேண்டுமானாலும், இந்த மரத்தை விற்று பணமாக்க முடியும்! நடவு செய்த ஓராண்டுக்குள்ளாகவே தோப்பாக மாறிவிடும் அளவுக்கு இதன் வளர்ச்சி அபரிமிதமானது. 


 ஏக்கருக்கு 200 மரங்கள்! 

சரி, வணிகரீதியாக இதனை சாகுபடி செய்வது எப்படி என்பது பற்றி பார்ப்போம். வடிகால் வசதி கொண்ட அனைத்து நிலங்களிலும் வளரும். என்றாலும், மணல் கலந்த வண்டல் மண் பூமியில் சிறப்பாக வளரும். 23 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 5 முதல் 7 வரையிலான கார அமில நிலை உள்ள மண்ணும் இதற்கு ஏற்றது.

 நிலத்தை நன்கு உழவு செய்து 15 அடிக்கு 15 அடி இடைவெளியில் இரண்டு அடி நீளம், அகலம் மற்றும் ஆழமுள்ள குழிகளை எடுத்து நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால், ஏக்கருக்கு 200 கன்றுகள் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் மண்புழு உரம்- ஒரு கிலோ, வேர்வளர்ச்சி உட்பூசணம்-30 கிராம் (வேம்), மட்கிய தொழுவுரம்- ஒரு கிலோ, அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா-தலா 15 கிராம் ஆகியவற்றைப் போட்டு, பையில் உள்ள கன்றுகளை மண் கட்டி உடையாமல் பிரித்து நடவேண்டும். செடிகளின் வேர்ப்பகுதி பூமியின் மேல்பகுதியில் தெரியாதவாறு, மேல்மண்ணைக் கொண்டு குழிகளை மூடவேண்டும். நிலம் முழுக்க இதை நடவு செய்ய முடியாதவர்கள், வரப்பு ஓரங்களில் 10 அடி இடைவெளியில் நடவு செய்யலாம். 

மேற்சொன்ன அடிப்படையில்தான் வனவிரிவாக்கத்துறை பரிந்துரை செய்கிறது. ஒரே மாதிரியான அளவில் மரங்கள் கிடைக்க இதைக் கடைபிடிக்கலாம். ஆனால், விவசாயிகள் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில், ஏக்கருக்கு 400 கன்றுகள் வரையிலும்கூட நடவு செய்கிறார்கள். பெருத்திருக்கும் மரங்களை சீக்கிரமே வெட்டிவிட்டு, மற்ற மரங்களை மேலும் வளரவிட்டு பிற்பாடு வெட்டி விற்பனை செய்கிறார்கள்.


3 வருடம் வரை ஊடுபயிர் செய்யலாம்! 

வாரம் ஒரு தண்ணீர் கொடுத்தால் நல்லது. 10 நாட்களுக்கு ஒரு முறையாவது தண்ணீர் கொடுப்பது அவசியம். முதல் 2 ஆண்டுகளில் மழைக் காலத்துக்கு முன்னதாக கன்றுகளைச் சுற்றி களை எடுத்து, மண்ணைக் கொத்தி விட்டால் வளர்ச்சி அதிகரிக்கும். இந்த மரத்தின் இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். எனவே, நடவு செய்த முதல் 3 ஆண்டுகள் வரை தண்ணீர் வசதியைப் பொறுத்து மஞ்சள், உளுந்து, வாழை, காய்கறிகள் போன்றவற்றை ஊடுபயிராகச் செய்யலாம். நேராக, உயரமாக வளரக்கூடிய மரம் என்பதால், ஓரளவுக்கு வளர்ந்த மரத்தின் தூர் பகுதியில் இரண்டு மிளகுக் கொடிகளை நடலாம். மிளகு மூலமும் தனி வருமானம் கிடைக்கும்! 

60 அடி உயரத்துக்கு மேல் வளரக்கூடிய மரம் இது. மாதம் சராசரியாக ஒரு செ.மீ. முதல் 2 செ.மீ. சுற்றளவுக்கு வளரும். சுமார் 20 அடி உயரம் வரை பக்கக் கிளைகள் வராது என்பதால், இலை, கிளைகளை வெட்டிவிட தேவையில்லை. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் (self pruning) தன்மை வாய்ந்ததும்கூட!  


ஆண்டுக்கு ஒரு லட்சம்!

ஓராண்டு காலம் வளர்ந்த மலைவேம்புத் தோட்டம், இயற்கையாக அமைந்த பசுமைக்குடிலை போன்று ரம்மியமாகக் காட்சியளிக்கும். 7-ம் ஆண்டு முடிவில் அறுவடை செய்யலாம். ஒரு மரத்தில் இருந்து சுமார் 15 கன அடி தடிமரம் கிடைக்கும். தற்பொழுது கன அடி 250 ரூபாய்க்கு விலை போகிறது. ஒரு மரம் 3,750 ரூபாய்க்கு விலை போகும். சராசரியாக 3,500 ரூபாய் எனக் கணக்கிட்டாலே, 200 மரங்களுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் வருமானம் கிடைக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். 

இது தற்போதைய நிலவரம். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த மரம் பிளைவுட் செய்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. பூச்சி அரிக்காது என்பதால் கட்டடங்களின் உள் அலங்கார வேலைகளுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மரத்தின் சுற்றளவு அதிகரிக்க அதிகரிக்க பலகை, ஜன்னல் கட்டைகள், நிலைக்கட்டைகள் செய்வதற்கும், மேசை, நாற்காலி, கட்டில்கள் செய்யவும் பயன்படும். வணிகரீதியில் மிகப்பெரிய பயனைத் தரக்கூடிய மலைவேம்பை நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். தரமான மலைவேம்பு நாற்றுகள் குறைந்த விலையில் அனைத்து வனவியல் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கின்றன.


75 லட்ச எதிர்பார்ப்பு! 

மலைவேம்பை தனிப்பயிராக 5 ஏக்கரில் சாகுபடி செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் கோனூர், வெங்கடேசன். அவரிடம் பேசியபோது, ''நான் எம்.சி.ஏ. படிச்சிருக்கேன். படிச்சவங்கள்லாம் விவசாயத்துல பெருசா லாபம் இல்லனு, அதை விட்டுட்டு வேற வேலைக்குப் போறாங்க. ஆனா, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முறையா செஞ்சா, விவசாயத்துலயும் நல்ல வருமானம் பாக்க முடியும். 

ஏக்கருக்கு 400 செடிகள் (10 அடிக்கு ஜ் 10 அடி) வீதம் 2009-ம் வருஷம் நவம்பர் மாசம் 5 ஏக்கர்ல 2,000 செடிகளை நடவு செஞ்சேன். ஒண்ணேகால் வருஷத்துல ஒவ்வொரு மரமும் 35 செ.மீ. சுற்றளவுல, 20 அடி உயரத்துல வளர்ந்து தோப்பா நிக்குது. இப்போதைக்கு கன அடி 250 ரூபாய்னு சொல்றாங்க. நான் இன்னும் 5 வருஷம் கழிச்சுதான் வெட்டணும். இன்னிக்கு விலைக்கு கணக்குப் போட்டாலே... குறைஞ்சபட்சம் ஒரு மரம் 3,750 ரூபாய் வீதம், 2,000 மரத்துல இருந்து 75 லட்ச ரூபா கிடைச்சுடும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர், ''ஊடுபயிரா சோதனை அடிப்படையில வாழையை நட்டுப் பார்த்தேன். நல்லாவே வளர்ந்து வந்துச்சி. அதனால 5 ஏக்கர்லயும் ஊடுபயிரா இலைவாழையை நடவு செய்ய முடிவு செஞ்சிருக்கேன்'' என்று சொன்னார். 

தொடர்புக்கு, வெங்கடேசன், அலைபேசி: 92458-47805 இந்தியாவே தாயகம்! மலைவேம்பு, மீலியேசி எனப்படும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். காட்டு வேம்பு, மலபார் வேம்பு என்றும் அழைக்கப்படுகிறது. இம்மரம் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. 

நன்றி: http://kulasaivaralaru.blogspot.in/2012/05/26-grow-tree.html
     

Thursday, 15 November 2012

குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் மலைவேம்பு

குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் மலைவேம்பு

மலைவேம்பு... மானாவாரியிலும் மகசூல்
கன்றுகளை வாங்க வேண்டாம், நீங்களே உற்பத்தி செய்யலாம்...

 
குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில், இத்தகையப் பிரச்னைகளை சரி செய்யும் நோக்கிலும்... வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய வகையிலும், 'ஒட்டு ரக மலைவேம்பு’க் கன்றுகளை உருவாக்கியிருக்கிறார், தமிழக வனத்துறையின் முன்னாள் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலர் குமாரவேலு!
(பசுமை விகடன் 10.2.2008 தேதியிட்ட இதழில் 'மலைக்க வைக்கும் மலைவேம்பு!’ என்ற கட்டுரை மூலம் குமாரவேலு, மலைவேம்பு சாகுபடி பற்றி நிறைய தகவல் சொல்லியிருந்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மலைவேம்பு சாகுபடி வேகமெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது)
மாதம் ஒரு லட்சம் டன்!
கடலூர் மாவட்டம், வேகாக்கொல்லை கிராமத்திலிருக்கும் நாற்றுப்பண்ணைக்கு, வந்திருந்த குமாரவேலுவைச் சந்தித்தபோது... ''மூங்கில், சவுக்கு, தேக்கு... என்று ஏகப்பட்ட மரங்கள் இருந்தாலும், மலைவேம்பு மரம் சீக்கிரமாகவே வளர்ந்துவிடுவது விவசாயிகளுக்கு விரைவான பலன் தருவதாக இருக்கிறது. தீக்குச்சித் தொழிற்சாலைகளுக்கு ஒரு மாதத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் டன் அளவுக்கு மலைவேம்பு மரம் தேவைப்படுகிறது. காகித ஆலைகளுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 5 லட்சம் டன் அளவு மரம் தேவைப்படுகிறது என்பதால், விற்பனையில் எந்தப் பிரச்னையும் இல்லை.
விதைக்கன்றுகளில் தரமில்லை!
ஆனால், நல்ல வளர்ச்சியுள்ள தரமான கன்றுகள், குறைந்த விலையில் கிடைப்பதில்லை. நன்றாக வளர்ந்த பெரிய மரங்களில் இருந்துதான் விதைகளைத் தேர்வு செய்து கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். பெரும்பாலான பண்ணைகளில் நல்ல விதைகளைத் தேர்வு செய்யாமல், தரமில்லாத கன்றுகள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால், மரங்களின் வளர்ச்சி சீராக இருப்பதில்லை.
கைகொடுக்கும் குளோனிங் கன்றுகள்!
2008-ம் ஆண்டு நான் பணி ஓய்வு பெற்ற பிறகு, தமிழ்நாடு புகளூர் காதித ஆலை நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்தேன். அப்போது, தரமான, நன்றாக வளர்ச்சியடைந்த மரங்களைத் தேர்வு செய்து, தரமான வித்துகள் மூலம் 'திசு வளர்ப்பு’ முறையிலும், குளோனிங் (விதை இல்லா இனப்பெருக்க முறை) முறையிலும் கன்றுகளை உற்பத்தி செய்து, ஆய்வுகளை மேற்கொண்டோம்.
அவை சிறப்பாக வளர்ந்து வந்தன. அதனால், அந்த ஆலையில் தற்போது ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் அளவில் 'குளோனிங்’ கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மிகமிகக் குறைவாக 6 ரூபாய் விலையில் விநியோகிக்கப்படுகின்றன.
மலைவேம்புக் கன்றுகள் குறித்தத் தகவல்கள் தேவைப்படுவோர், புகளூர் காகித ஆலை நிறுவனத்தைச் சேர்ந்த முனைவர். சின்னராஜ் மற்றும் முனைவர்.செழியன் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்'' என்ற வழிகாட்டுதல் தந்த குமாரவேலு, தொடர்ந்தார்.
வறட்சிப் பகுதிகளுக்கு ஒட்டுக்கன்றுகள்!
''தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் சூழ்நிலையில், மரங்கள் வளர்க்க போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. மலைவேம்புக்கும் இந்தப் பிரச்னை உண்டு. அதனால், தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் மலைவேம்பை எப்படி வளர்ப்பது என்று யோசனை செய்த போதுதான், வேப்ப மரத்துடன் ஒட்டுக்கட்டும் யோசனை தோன்றியது. வேப்ப மரத்தில் இருக்கும் ஆணிவேர் 10 மீட்டர் ஆழம் வரை செல்லும் தன்மையுடையது. அதனால், பூமிக்கடியில் உள்ள தண்ணீரை எளிதில் உறிஞ்சி எடுத்துக் கொள்ளும். மேலும், களர் மற்றும் உவர் மண் பூமியிலும் சிறப்பாக வளரும். வேப்ப மரமும், மலைவேம்பு மரமும் 'மீலியேசியே’ (விமீறீவீணீநீமீணீமீ) என்ற குடும்பத்தைச் சேர்ந்தத் தாவரங்கள். அதனால்தான், 'இரண்டையும் ஒட்டுக் கட்டினால் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய கன்றுகள் கிடைக்கும்’ என முடிவு செய்தேன்.
ஆரம்பத்தில், திருச்சி மாவட்டம், முக்கொம்பு வன மையத்தில் 50 ஒட்டுக்கன்றுகளை உருவாக்கி, அவற்றை அரிமளம். வன ஆராய்ச்சி நிலையத்தில் நட்டுப் பராமரித்தோம்.
6 மாதங்களிலேயே அதிகமான வளர்ச்சி இருந்தது. ஆகையால், இந்த ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறேன்'' என்றவர், வேகாக்கொல்லை நாற்றுப்பண்ணை பற்றிய செய்திக்கு வந்தார்.
ஒரு நாற்று ஏழு ரூபாய்!
''நெய்வேலி அருகிலிருக்கும் இந்த வேகாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், குளோனிங் முறையில் மலைவேம்பு கன்றுகளை உருவாக்கி, விற்பனை செய்துவருகிறார். தற்போது, தனியார் நாற்றுப் பண்ணைகளில் ஒரு மலைவேம்பு கன்றை 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள்.
ஆனால், இவர், குளோனிங் முறையில் உற்பத்தி செய்யும் கன்றுகளை 7 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். இவருக்கு ஒட்டுரகக் கன்றுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை நான் கற்றுத் தந்திருக்கிறேன். இதன் மூலம் உருவான கன்றுகளை விரைவில் விற்பனை செய்ய இருக்கிறார்'' என்ற குமாரவேலு, அடுத்து... ஒட்டுரகக் கன்று உருவாக்கும் தொழில்நுட்பத்தை விவரித்தார்.
இப்படித்தான் ஒட்டு கட்டணும்!
''ஒரே வயதுடைய வளமான நாட்டு வேம்பு மற்றும் மலைவேம்புக் கன்றுகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். பிறகு, நாட்டு வேம்பின் மேல்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, அடிப்பகுதியையும், மலைவேம்புச் செடியின் அடிப்பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, மேல் பகுதியையும் எடுத்துக் கொள்ள வேண்டும். வெட்டி வைத்திருக்கும் மலைவேம்பு கன்றின் தண்டு பாகத்தின் முனைப் பகுதியில், ஒரு பக்கத்தை மட்டும் சீவிக் கொள்ள வேண்டும்.
பிறகு, நாட்டுவேம்பின் தண்டை கொஞ்சம் போல இரண்டாகப் பிளந்து, அதன் மையத்தில் மலைவேம்பு தண்டின் சீவிய பாகத்தை வைத்து, பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு காற்று புகாத அளவுக்கு இறுக்கிக் கட்ட வேண்டும். பிறகு, நிழல் வலையில் 20 நாட்கள் வைத்திருந்தால் துளிர் வரும். பிறகு, கன்றுகளை வேறு இடத்தில் மாற்றி நடவு செய்யலாம். இது மிகமிக எளிதான தொழில்நுட்பம்தான். யார் வேண்டுமானாலும், இந்த முறையில் ஒட்டுக் கன்றுகளை உருவாக்கிவிட முடியும்'' என்று நம்பிக்கைஊட்டினார்!
தொடர்புக்கு,

முனைவர். குமாரவேலு,
செல்போன்: 96000 -73059,
முனைவர். செழியன்
(புகளூர் காகித ஆலை)
செல்போன்: 94425-91412.

இடைவெளி கணக்கில்லை!
மலைவேம்புக் கன்றுகளை, 10 அடி, 9 அடி, 5 அடி... என நமது இடவசதியைப் பொறுத்து, தேவைக்கு ஏற்ற அளவில் இடைவெளி கொடுத்து, நடவு செய்து கொள்ளலாம். 10 அடி இடைவெளியில் நடவு செய்தால், ஏக்கருக்கு சராசரியாக 350 முதல் 400 கன்றுகள் தேவைப்படும். 9 அடி இடைவெளி என்றால், 540 கன்றுகளும், ஐந்தடி இடைவெளி என்றால், 1,000 முதல் 1,200 கன்றுகளும் தேவைப்படும். வரப்பு ஓரங்களில் 3 மீட்டர் இடைவெளியிலும் நடவு செய்யலாம். இதற்கு ஏக்கருக்கு 80 முதல் 100 கன்றுகள் தேவைப்படும்.
மூன்று அடி சதுரம், மூன்றடி ஆழத்தில் குழி எடுத்து... மண்புழு உரம்-2 கிலோ, வேம் (வேர் வளர்ச்சி உட்பூசணம்)-50 கிராம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவற்றில் தலா 20 கிராம் இவற்றை மண்ணோடு கலந்து இரண்டு அடி ஆழத்துக்குக் குழியை நிரப்பி, மையத்தில் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். ஒட்டுப்பகுதி, குழியின் உள்ளே, இருப்பது போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம், முழுவதுமாக மண்ணைப் போட்டு மூடி விடக்கூடாது. அதாவது, ஒட்டுப்பகுதியானது மண்ணால் மூடப்படாமல் இருக்க வேண்டும். கன்று வளரத் தொடங்கியபின் கொஞ்சம் கொஞ்சமாக மூடி வரவேண்டும். ஒரு வருடத்தில் முழுவதும் மூடிவிடலாம். ஒட்டுக்கன்றுகளுக்கு சொட்டுநீர் மூலம் குறைந்த அளவு தண்ணீர் கொடுத்து வந்தால், போதுமானது. தண்ணீர் வசதி அதிகமாக இருந்தால், 'குளோனிங்’ கன்றுகளை நடவு செய்யலாம். தேவையைப் பொறுத்து உரமிட்டுப் பராமரிக்க வேண்டும்.
ஒன்பது ஆண்டுகளில் 20 லட்சம்!
9 அடிக்கு, 9 அடி இடைவெளியில் நடவு செய்த மரங்கள், மூன்று வருடங்களில் 45 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வரும். அப்போது, ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு ஏறத்தாழ, 35 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். ஒரு டன், 5 ஆயிரம் ரூபாய் என விற்க முடியும்.
மீதி மரங்கள், அடுத்த மூன்றாண்டுகளில் (நடவு செய்து ஆறு ஆண்டுகள்) 100 சென்டி மீட்டர் சுற்றளவுக்கு வந்து விடும். இவற்றிலும் ஒரு மரம் விட்டு ஒரு மரம் என்று வெட்டினால்... 90 மரங்கள் வரை கிடைக்கும். ஒரு மரத்தை 6 ஆயிரம் ரூபாய் என விற்க முடியும்.
இப்போது வெட்டியது போக 90 மரங்கள் வரை நிலத்தில் மிச்சமிருக்கும். இவை அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில் (நடவு செய்து பத்து ஆண்டுகள்) 150 சென்டி மீட்டர் முதல் 200 சென்டி மீட்டர் வரை சுற்றளவுக்கு வந்து விடும். அந்த சமயத்தில் ஒரு மரத்தை 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும். இந்தக் கணக்கில் பார்த்தால்... 10 வருடங்களில் ஒரு ஏக்கரில் இருந்து சராசரியாக 20 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
thanks vikatan + duraisamy erode + nermai-endrum.blogspot.com

தவிர்க்கப்படவேண்டிய நோய்த்தன்மை உடைய 10 உணவுகள்

ஆரோக்கிய வாழ்க்கை என்பது நீங்கள் தேர்வு செய்வது .நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவை சார்ந்திருக்கிறது . நம் சொந்த ஆரோக்கியமானது ஆழ்ந்த தாக்கம் உடையது . உணவு ,உயிர்ச்சத்து இவற்றின் அடிப்படடைக் கொள்கைகளை  புரிந்து கொள்வதன் மூலம் நீங்கள் ஆரோக்கிய வாழ்வின் உச்ச சக்தியை பெறமுடியும் . ஒவ்வொரு நாளும் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நம் உணவு பழக்கத்திலுள்ள நோய்த்தன்மை உள்ள உணவுகளை சிறிது கவனத்திற்கு கொண்டுவருவோம் .


  முதல் நோய்தன்மையுடைய உணவு : பால் 


                                                         பூமியில் பால் அருந்துவதிலிருந்து பிரிக்க முடியாத ஒரு உயிர் ஜீவி இருக்கிறது என்றால் அது மனிதன்தான் .எந்த ஒரு உயிரினமும் தனது இனத்து பாலை தவிர மற்ற இனத்தின் பாலை குடிப்பதில்லை. பசுவின் பாலின் இரசாயன அமைப்பு மனித இன பாலின உள்ளமைப்பிலிருந்து வேறுபட்டது . அது இலகுவாக ஜீரணம் ஆகாத ஒன்று. நமது உடலின் மீது மிகப்பெரிய சுமையை ஏற்றுகிற உணவு. ஆராய்ச்சி முடிவுகளின்படி , பால்  பலவித நோய்களுக்கு உதாரணமாக தைராய்டு பிரச்சினைகள் ,இதயநோய்கள், புற்றுநோய்,மூட்டுவலி, கை, கால் நடுக்கம் ,ஒற்றை தலைவலி , தலைவலி பிரச்சினை ,எதிர்வினைகள் , காது சம்பந்தமான தொற்றுநோய்கள் , காச நோய்கள் மேலும் உடல் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு காரணமாக செயல்படுகிறது .பசும்பாலில் உள்ள கால்சியம் மிகவும் தரம் குறைந்தது. மனித உடல் ஏற்றுகொள்ள முடியாத நிலையில் உள்ளது . நாம் இரத்த சோகையினால் பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் பால் உணவுகளில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது .மிருகப்பால் மனித ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல .

இரண்டாவது ஆரோக்கியமற்ற உணவு : சர்க்கரை

                                                                                       சர்க்கரை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை கட்டுப்படுத்துகிறது . மேலும் உடலின் தாது சமன்பாட்டை  நிலைகுலைய செய்கிறது. நீரிழிவு நோய்க்கு காரணமாகிறது .மேலும் உடலில் உருவாகும் உட்சுரப்பு திரவத்தின் சமநிலைக்கேடுக்கு காரணமாகிறது .சர்க்கரை டால்டா , ஆல்பா , பீட்டா , என்ற மூளை அலைகளின் வளர்ச்சிக்கு காரணமாகிறது . அதிக எண்ணிக்கையையும் உருவாக்குகிறது. இதன்மூலம் தெளிவாக சிந்திக்ககூடிய மனித மூளையின் திறமையை குறைக்கிறது.

மூன்றாவது ஆரோக்கியமற்ற உணவு :கடல் உப்பு 

 

 
                                                            அதிக உப்பு அதிக இரத்த அழுத்தத்தையும்  நரம்பியல் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது. அதிக உப்பு கலந்த உணவு, எலும்பு அடர்த்தியை குறைக்கிறது. உப்பு அதிகமாவது  இடது வேன்ரிகுலர்  ஹைபர்டிரபி( Left ventricular hypertrophy ) இதயம் அளவில் பெரியதாவது , இதய நோய் வருவதற்க்கான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது . மூளைத்திசுவிற்கு உப்பு உகந்ததல்ல . இதன் மூலம் சிறிய தாக்குதல்களுக்கு காரணியாகிறது. 

நான்காவது ஆரோக்கியமற்ற உணவு : பாலிஸ் செய்யப்பட்ட அரிசி

 

மேன்மைபடுத்தப்பட்ட வெள்ளை அரிசியை உட்கொள்ளுவதால் வயிற்று குடல் பிரச்சினைகளும்  இதய நோய்களும் வரும் சூழ்நிலை உருவாகிறது. ஏனென்றால் நார்ச்சத்து மற்றும் மிக அத்தியாவசியமான எண்ணைகளை கொண்டிருக்கும் தவிடு ( நோய்களை தடுக்கும் பணியை செய்யும் ) அரிசியை மேன்மைபடுத்தும்போது  அது முற்றிலும் நீக்கபடுகிறது.  மேன்மைபடுத்திய அல்லது வெள்ளை அரிசி கோலோஸ்டிராலுக்கு காரணமாகிறது. ஏனென்றால் உடலுக்கு உதவும் எல்லா நல்ல எண்ணெய்களும் இந்த அரிசியிலிருந்து நீக்கபடுகிறது . இதை தவிர்த்து  உங்கள் உடலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் வெள்ளை அரிசி தன்வயபடுத்துகிறது .அதிகபடியான கார்போஹைட்ரேட்  உணவு உட்கொள்ளுவதால் சர்க்கரையின் சமன்பாடு சீர்குலைகிறது . இது நீரிழிவு நோய்க்கு வழி வகுக்கிறது. மேலும் இது உடலிலுள்ள சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் உள்ளமைப்பின்மீது அதிக அழுத்தத்தை செலுத்தி சீர்குலைக்கிறது 

ஐந்தாவது ஆரோக்கியமற்ற உணவு : வெள்ளை மாவு

வெள்ளை மாவு கணையத்தின் பீட்டா செல்களை அழித்துவிடும் . நீரிழிவு நோய்களை உருவாக்கும் ரசாயன பொருளான அல்லோக்சனை கொண்டிருக்கிறது. ஒருவர் மேன்மைபடுத்தபட்ட உணவை அதிகமாக உட்கொண்டால் அதை சமாளிக்க அதிகமான அளவில் இன்சுலின் சுரக்க வேண்டும் . வெள்ளை மாவில் உள்ள செயற்கையான B -வைட்டமின்கள் நிலக்கரி தாரிலிருந்து (Coalter ) உருவாக்கபடுகிறது. இது உடலின் உள்ளமைப்பில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது . கடைகளில் விற்கப்படும் வெள்ளை மாவு அதிக நாள் கடை அலமாரிகளில் வைப்பதற்காக கலக்கப்பட்ட ரசாயன பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது . பொட்டாசியம் bromat  போன்ற இந்த வேதியல் கலவை புற்று நோயை உருவாக்கும் தன்மை உடையவை . வெள்ளை மாவில் உள்ள குளுடன் (Gluten ) என்ற பொருள், குளுடன்  ஏற்று  கொள்ளாதவர்களுக்கு குடல் நோயை ஏற்படுத்துகிறது. மேலும் இது எரிச்சல் ஊட்டக்கூடிய bowel  syndromes , crohns disease , dermatitis herpetifornus (autism ) cerate colitis   என்ற பலநோய்களை உருவாக்குகிறது .

ஆறாவது ஆரோக்கியமற்ற உணவு : சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்


                                               Hydrogenation  என்ற முறையின்  மூலம் பல முக்கியமான உயிர்ச்சத்துக்கள் நீக்கப்படுகின்றன .இது மொத்த கொலஸ்ட்ரால் வரம்புகளை அதிகமாக்குகிறது . HDL கொலஸ்ட்ராலை  குறைக்கிறது . LDL கொலஸ்ட்ராலை உயர்த்துகிறது.இந்த எண்ணெய்களை உட்கொள்ளுவதால் Breast ,Pastorate and coloncancers இந்த வகையான புற்று நோய்கள் நம்மை தாக்கும் அபாயம் அதிகமாகிறது.Toxins and carcinogens என்ற கேடுகளை தவிர்க்ககூடிய உடலின் உள்ளார்ந்த சக்தியை இது குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இது உடலில் சுரக்கும் சில திரவங்களிடம் குறுக்கிடுகிறது.


ஏழாவது ஆரோக்கியமற்ற உணவு: குளிர்பானங்கள்


வாயு கலந்த குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் கார்பன் -டை -ஆக்சைடு மிகவும் ஆபத்தானது . இதன் காரணமாக குளிர்பானங்கள் அசிடிக் ஆகின்றன . இது நமது உடலில் உள்ள நமக்கு பயன் தரக்கூடிய நுண்ணுயிர்களை பெரும்பான்மையான உயிரிகளை கொன்றுவிடும் அளவுக்கு அசிடிக் குணம் உடையதாகிறது. குளிர்பானங்களை குடிப்பது ஜீரண வழிமுறைகளை தாமதமாக்குகிறது . குளிர்பானங்களில் அதிகமான சர்க்கரை அளவு மிக அதிகமான கலோரி உள்வாங்குவதால்  பற்சிதைவு ,அதிகமான உடல் எடை என்ற சங்கடங்களையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறது. இரத்தத்தில் கலந்துள்ள பாஸ்பரஸ் மூலத்தன்மையை நீக்குவதற்கு (இது குளிர்பானத்தில் கலக்கபடுகிறது) எலும்புகளில் இருந்து கால்சியத்தை அப்போபடுத்தி பின்னர் இரத்த ஓட்டத்துடன் கலக்க செய்து osteoporosis என்ற ஒரு நோயை உருவாக்குகிறது. குளிர்பானங்களில் உள்ள carbolic Acid எலும்புகளை சிதைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.


எட்டாவது ஆரோக்கியமற்ற உணவு காபி மற்றும் தேனீர்



இது பலருக்கும் தவிர்க்கமுடியாத பழக்கம் . மிக ஆபத்தான பொருட்களின்  கூட்டு சிக்கலான கூட்டுசேர்க்கையான நியாசின் ,cafin ,டிரைகொநெல்லின் ,டேனிக்  அமிலம் என்ற பல பொருட்களின் மொத்த வடிவம் .kafin  நமது உடலில் உள்ள மொத்த நரம்பு  தூண்டிவிட்டு சுறுசுறுப்பாக்குகிறது .அதிக சக்தி என்ற ஒரு கற்பனை தோற்றத்தை உருவாக்குகிறது. இதன் அடுத்தகட்டமாக நமது பசியுணர்வை கட்டுப்படுத்துகிறது .

உண்மையில் ,உடல் 24 மனித்துளிகளுக்கும் மேலாக ஒரு கப் காபியின் விளைவுகளைப் போக்குவதற்கு எடுத்துக்கொள்கிறது. காபியின் நீண்ட நாள் விளைவுகள் என்னவென்றால் அடிக்கடி தலைவலி ,ஆங்காங்கே சிவப்பான தோல் திரட்டு ,இதயத்தின் வேகத்துடிப்பு , மலச்சிக்கல் , அதிக தளர்ச்சி , மனநிலையில் ஏற்ற தாழ்வுகள் , மனதை ஒருமுகபடுத்த முடியாமை போன்ற பல விளைவுகளே .

இந்த பானங்கள் உடலின் ஈரப்பசையை நீர்த்தன்மையை நீக்குகின்றது . மேலும் நமது தூக்கத்தை கட்டுபடுத்துகிறது .

ஒன்பதாவது ஆரோக்கியமற்ற உணவு: ஐஸ் கிரீம் 




 செயற்கையான மணங்களும் ,சுவைகளும் மிகவும் பலம் வாய்ந்த சீர்கேடு உணவுகள் .இதன்மூலம் கல்லீரல் , சிறுநீரகம் ,மேலும் இதயம் இவற்றில் நோய்கள் உருவாக வாய்ப்புண்டு . இதில் பயன்படுத்தப்படும் பெப்ரோணல் என்ற மணமூட்டும் ஒரு பொருள் பேன்களை கொல்ல  பயன்படும் ஒரு வேதியல் சாதனம் . அன்னாசிப்பழ ஐஸ் கிரீமில் உபயோகிக்கப்படும் எதில் அசிட்டேட் (Ethyl acetate ) தோல் சம்பந்தமான தொழிலிலும் ,துணி ஆலைத் தொழிலிலும் பயன்படுத்தப்படும் ஒரு வேதியல் பொருள் .இது அந்த தொழில்களில் சுத்திகரிப்புக்கு பயன்படுகிறது . அதிலிருந்து வரும் ஆவிக்காற்று ,தீவிரமான நுரையீரல் , கல்லீரல் இதய பாதிப்புகளை உருவாக்கும் . வாழைப்பழ மணத்திற்காக பயன்படும் amyl butyrate  ஆயில் பெயின்ட் சால்வன்ட்டாக (oil paint solvent ) உபயோகப்படுகிறது. aldehydec 17 செர்ரி flavour ஐஸ் கிரீமில் உபயோக்கிக்கபடுகிறது .இது எளிதில் எரியக்கூடிய ஒரு திரவம் .Plastic மற்றும் ருபபேர் தயாரிப்பு தொழிலில் aniline dyes ஆகப்பயன்படுகிறது 

பத்தாவது ஆரோக்கியமற்ற உணவு : மாமிச உணவு 


புரதச்சத்து அதிக அளவில் இருப்பதால் அசைவ உணவு சிறுநீரகங்களை அதிக வேளையில் ஆழ்த்துகிறது .இதனால் உடல் உறுப்புகளில் இயக்கத்திரன் குறைகிறது. இது ஆரோக்கியத்தை உருக்குலைக்கும் கோளாறுகளை நம் உடலில் ஏற்ப்படுத்தும் .அசைவ உணவுகள் அதில் உள்ள கொழுப்பு சக்தியால் கலோரிகளை அதிகப்படுத்துகின்றன .இது உடல் பருமன் ,நீரிழிவு ,உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய கேடுகலுக்கு வழிவகுக்கிறது . ஏல்லா மிருகங்களின் திசுக்களும் நச்சுத்தன்மை கொண்ட கழிவுகளை தன்னகத்தே கொண்டுள்ளன .மாமிச உணவை உட்கொள்ளும்போது ,உடல் அமைப்பில் உள்ள விஷத்தன்மையின் எல்லைகள் வரம்பு மீறுகின்றன .அசைவ உணவில் நார்த்தன்மை (Fiber content ) குறைவாக உள்ளதால் குடல் பகுதியில்  உணவின்
இயக்கம் குறைந்து colon புற்று நோய்க்கு காரணமாகிறது .அதாவது குடல் வாயிலிருந்து    மலக்குடல் வரை உள்ள பெருங்குடலின் பகுதியில் புற்று நோயின் பாதிப்பு  வரக்கூடும் . அசைவ  உணவின் விளைவான அதிக அளவு யூரிக் அமிலம் (Uric Acid ) பல நோய்களை  வாதரோகம் ,பிளைட் நோய் (blights disease ) சிறுநீரகக் கற்கள் , கீழ்  வாதம்( முழங்காலில் வீக்கம் ) பித்தப்பை கற்கள் போன்ற பல உடல் நலக் கேடுகளை உருவாக்கும்